ஒருதலை காதலால் விபரீதம்! இளம்பெண் சரமாரியாக குத்திக்கொலை!

ஸ்ரீகாகுளம்:  காதலை ஏற்காத இளம்பெண்ணின் வீடு புகுந்து அவரை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜானகி(19). இவர் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வந்துள்ளார்.

 

தனது தோழியுடன் மூசபேட்டை பகுதியில் தங்கி இருந்தார். இவர் வேலை பார்த்து வந்த சூப்பர்மார்க்கெட்டில் ஆனந்த் என்பவரும் பணியாற்றிவந்தார்.

ஆனந்த் ஜானகியை ஒருதலையாக காதலித்து வந்தார்.  ஜானகியிடம் பல முறை தனது காதலை ஏற்றுக்கொள்ளும் படி வற்புறுத்தினார்.

இந்நிலையில், மீண்டும் வழக்கம் போல் ஜானகி தங்கியிருந்த வீட்டிற்கு சென்று, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார்.

 

 

ஜானகி மறுப்பு தெரிவிக்கவே, கோபம் அடைந்த ஆனந்த் மறைத்து வைத்து இருந்த கத்தியால் ஜான்கியை சரமாரியாக குத்தி உள்ளார்.

இதில் ஜானகி அதே இடத்தில் பலியானார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here