செருப்பில் கேமரா பொருத்தி பெண்களை படம்பிடித்தவர் கைது!

திருச்சூர்: பெண்கள் அதிகம் கூடுமிடங்களில் செருப்பில் கேமராவை பொருத்தி பெண்களை ரகசியமாக படமெடுத்தவர் போலீசில் சிக்கினார்.

கேரளமாநிலம் திருச்சூரில் அரசு கலை விழா கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

 

பெண்கள் இருக்கும் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக ஒருவர் அங்குமிங்கும் திரிந்துவந்தார்.

போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் பெண்களை ரகசியமாக படமெடுத்ததும், அதற்காக செருப்பில் செல்போனை மறைத்துவைத்து விடியோ எடுத்ததும் தெரியவந்தது.

திருச்சூரை சேர்ந்த பிஜூ(41), படம்பிடிப்பதற்காக விசேஷமாக செருப்பு தைத்து வைத்துள்ளார். அதில் கேமராவை பொருத்த விசேஷ அறை உள்ளது.

செல்போன் கேமரா படமெடுக்க மட்டும் சிறிய துளை அதில் உள்ளது.

சாதாரணமாக பார்க்கும்போது அது பிய்ந்துபோன செருப்பு போன்ற தோற்றத்தை தருகிறது.

இந்த செருப்பை பேருந்தில் பெண்கள் ஏறும் பகுதியில் வைத்துவிடுவார் பிஜூ.  ஏதோ பிய்ந்த செருப்பு என்று பெண்கள் கருதி அதனருகில் நின்றுகொண்டிருப்பார்கள். ஆனால், அவர்களை ரகசியகேமரா படமெடுத்துக் கொண்டிருக்கும்.

இதுபோல் கடந்த ஒரு வருடமாக பிஜூ படமெடுத்து வந்ததாக போலீசில் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து பிஜூவை போலீசார் கைது செய்தனர்.

இதுபோன்ற பிய்ந்த செருப்புகள் கிடந்தால் உஷாராக இருக்க வேண்டும் என்று பெண்களுக்கு போலீசார் அறிவுரை கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here