ரூ.21கோடியில் வீடு தயார்! தனிக்குடித்தனத்துக்கு தயாராகும் ஐஸ்வர்யாராய்!!

மும்பை: நடிகை ஐஸ்வர்யா ராய் மும்பையில் புதிய அடுக்குமாடி வீட்டில் குடியேறவுள்ளார்.               நடிகை ஐஸ்வர்யா ராய் தனிக்குடித்தனம் வரவுள்ளார் என்று செய்திகள்வெளியாகி உள்ளன.

இந்நிலையில் அவர் குடியேறவுள்ள புதிய வீடு குறித்து தகவல்கள் தெரியவந்துள்ளன.

ரூ.21 கோடி செலவில் மும்பை பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் புதிய வீடு அமைந்துள்ளது.
5,500சதுரஅடி பரப்பில் அமைந்துள்ளது இப்புதிய வீடு.
இதில் நீச்சல் குளம், உடற்பயிற்சிக்கூடம், மினி திரையரங்கம் ஆகியவை உள்ளன.


2 ஆண்டுகளுக்கு முன் பந்த்ரா குர்லா காம்ப்ளக்சில் வீடு வாங்க தீர்மானித்து அதற்கான ஒப்பந்தம் செய்துகொண்டார் ஐஸ்வர்யா ராய்.
வீட்டின் பணிகள் முழுமையாக முடிவடைந்து அவர் குடியேற தற்போது தயாராக உள்ளது.


இவரது அடுத்த வீட்டில் நடிக சோனம் கபூர் வசித்துவருவது குறிப்பிடத்தக்கது.


அபிஷேக் ஐஸ்வர்யா தம்பதிக்கு மும்பை வொர்லி பகுதியில் 2பங்களாக்களும், துபாயில் வீடுகளும் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here