ரசிகரின் காலில் விழுந்த நடிகர்! வைரல் விடியோ!!

சென்னை: நடிகர் சூர்யா ரசிகரின் காலில் விழுந்து காலில் விழும் கலாச்சாரத்துக்கு எதிரானவன் என்று ரசிகருக்கு புரியவைத்தார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் தானா சேர்ந்த கூட்டம்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.

https://twitter.com/Sakaavu/status/951296151554228224
இசையமைப்பாளர் அனிருத் மற்றும் திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சூர்யாவுடன் சேர்ந்து ஆட சில ரசிகர்களை மேடைக்கு அழைத்தார் தொகுப்பாளினி அஞ்சனா.

அப்போது வந்த ஐந்தாறு ரசிகர்கள் மேடை ஏறியதும், சூர்யாவின் காலில் விழுந்து வணங்கினர். இதனால் அதிர்ச்சியான சூர்யா மீண்டும் அவர்களது கால்களில் விழுந்தார்.
இந்த விடியோ வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here