சட்டப்பேரவையில் ஆளும் கட்சியினரின் தமாசு!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆளும் கட்சியினரின் தமாசு எதிர்க்கட்சியினரை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது.
தமிழக சட்டப்பேரவையின் மூன்றாம் நாள் கூட்டம் நடைபெற்றது.


இந்தக் கூட்டத்தில் எம்.எல்.ஏ-க்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்துவருகிறார்கள். அ.தி.மு.க எம்.ஏல்.ஏ செம்மலை, ஓகி புயலை ஓகே புயல் என்று தனது பேச்சில் குறிப்பிட்டார். அதேபோல எம்.எல்.ஏ பிரின்ஸை தவறுதலாக ஜேம்ஸ் என்றும் கூறினார்.
அதனால், அவையில் அனைவரும் சிரித்தனர்.


எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோர் குலுங்கிகுலுங்கி சிரித்தனர்.

இதே போன்று ப்ளூடிக் குறித்த கெள்விக்கு ப்ளூடூத் பற்றி பதிலளித்திருக்கிறார் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன். எம்.எல்.ஏ செம்மலை ட்விட்டரில் உள்ள ப்ளூடிக் அம்சம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு ப்ளூடூத் பற்றி விளக்கமளித்துள்ளார் அமைச்சர் மணிகண்டன்.
இதனைத்தொடர்ந்து அவையில் உறுப்பினர்கள் கொல்லென்று சிரித்து கூரையை அதிரவைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here