கலெக்டர் அலுவலகத்தில் தாய், மகள் தீக்குளிக்க முயற்சி!

மதுரை: கலெக்டர் அலுவலகத்தில் தாய், மகள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழங்காநத்தம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி மீனாட்சி (41). மகள் நர்மதா ஆகிய இருவரும் கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

வளாகத்தில் நின்று கொண்டிருந்த அவர்கள் திடீரென்று தாங்கள் மறைத்து எடுத்துவந்திருந்த பெட்ரோல் கேனை எடுத்தனர். தங்களது உடல்களில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.

இதைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் பாய்ந்து சென்று அவர்களை தடுத்து நிறுத்தினர். பெட்ரோல் கேன்கள், தீப்பெட்டிகளை பறித்தனர். அவர்கள் இருவரையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
ராமலிங்கத்துக்குச் சொந்தமாக பைக்காராவில் 4 சென்ட் நிலம் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு நான் மகளுடன் அந்த இடத்தில் குடியேறச் சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சித்ரா என்பவர் தரக்குறைவாக பேசி தாய், மகளை கொல்லவும் முயன்றார்.

இது தொடர்பாக சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் அளித்தும் போலீசார் கண்டுகொள்ள வில்லை. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக தனது மகளுடன் தீக்குளிக்க முயன்றதாக கண்ணீருடன் தெரிவித்தார். போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here