லண்டன் எம்பிக்கள் இணையத்தில் தேடுவது இதைத்தான்!

லண்டன்: நாடாளுமன்றத்தில் இருந்து இணையத்தில் ஆபாசமான விஷயங்கள் தொடர்ந்து தேடப்பட்டு வருகின்றன.
நாடாளுமன்றத்தில் இருக்கும் இணையதள சேவையில் தினமும் சராசரியாக 160 முறை ஆபாசப்பட தளங்கள் உபயோகிப்படுகின்றன.


நாடாளுமன்ற வளாகத்தில் தற்போது யாரும் ஆபாசவிஷயங்களைப் பார்த்து மாட்டிக்கொள்ளவில்லை, இருப்பினும் பார்க்கின்றனர் என்கிறது இங்கிலாந்து பிரஸ் கூட்டம்.
ஜூன் மாதத்தில் இருந்து அக்டொபர் 2017 வரை 24,000 முறை ஆபாச வலைத்தளங்கள் உபயோகம் செய்யப்பட்டுள்ளது.


நாடாளுமன்ற நெட்ஒர்க் டேட்டா சேவையின் புள்ளிவிபரங்களில் இதுதொடர்பாக தெரியவந்துள்ளது.
இதுபோன்ற ஆய்வு எடுப்பதற்கு காரணம், பிரதமர் தெரசா மே.
டேமியன் கிரீன் என்ற அமைச்சரை ஆபாசப்படத்தை தன் கணினியில் வைத்திருந்தார் என்பதற்காக பதவியை விட்டு விலக்கியதுதான்.

சர்ச்சையை கிளப்பிய இந்த விஷயத்தால்தான் நாடாளுமன்றத்தில் இதுபோன்ற ஆய்வுகள் வெளியிடப்படுகிறது.

இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பலவிதமான ஆபாசப்பட தளங்களை தடை செய்துள்ளது அரசு. அப்படி தடை செய்யப்பட்டவை சுமார் 800க்கும் மேற்பட்ட தளங்களாகும். இருப்பினும் தினசரி 20 மில்லியனுக்கும் மேலானவர்கள் ஆபாசப்பட தளங்கள் பார்க்கின்றனர்.


பள்ளி மாணவர்கள் இதுபோன்ற வீடியோக்களுக்கு அடிமையாகி வருவதாகவும், சில ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஆபாசப்படங்கள் அதிகம் பார்க்கப்படும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும், இங்கிலாந்து இரண்டாமிடத்திலும், இந்தியா நான்காமிடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here