5மாதம் கிரிக்கெட் கூடாது! யூசுப் பதானுக்கு தடை!!

மும்பை: ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதானுக்கு, 5 மாதம் பி.சி.சி.ஐ., தடை விதித்துள்ளது.
இந்திய அணியின் ‘ஆல் – ரவுண்டர்’ யூசுப் பதான், 35. கடைசியாக, தேசிய அணிக்காக 2012ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக ஜோகனஸ்பர்க்கில் நடந்த 20ஓவர் போட்டியில் விளையாடினார்.


இருப்பினும், பரோடா அணி சார்பில் உள்ளூர் போட்டியில் பங்கேற்று வருகிறார்.
ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா அணியில் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் இந்திய கிரிக்கெட்வாரியத்தால் ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. யூசுப் பதானின் சிறுநீர் மாதிரி சோதனை செய்யப்பட்டது.


அதில், தடை செய்யப்பட்ட மருந்து கலந்திருந்தது தெரியவந்துள்ளது. இதனால், இவருக்கு 5 மாதம் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து பி.சி.சி.ஐ., வெளியிட்ட அறிக்கையில்,’ யூசுப் பதானின் சிறுநீர் மாதிரியில் ‘டெர்படாலின்’ என்ற மருந்து கலந்திருந்தது தெரியவந்துள்ளது. இது, சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு மையத்தின் விதிப்படி தடை செய்யப்பட்டதாகும்.
இருமலுக்காக எடுத்துக்கொண்ட ‘டானிக்கில்’ இது கலந்திருக்கலாம் என பதான் பதில் அளித்துள்ளார். இதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இருப்பினும், இவர் போட்டிகளில் பங்கேற்க 5 மாத தடை விதிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here