தேக்கம்பட்டி யானைகள் முகாம்! ஸ்டைலில் கலக்கும் மன்னார்குடி செங்கமலம்!!

கோவை: தமிழக அரசு சார்பில் கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் கோவில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடந்து வருகிறது.
4ம் தேதி தொடங்கி 48நாட்கள் நடைபெறவுள்ள இம்முகாமில் 33 யானைகள் கலந்து கொண்டுள்ளன.

 

 


யானைகளுக்கு தினமும் 600மீட்டர் நடைபயிற்சி, ஷவர் குளியல், சிறப்பு உணவு, மருத்துவ கண்காணிப்பு, சிறப்பு சிகிச்சை ஆகியவை யானைகளுக்கு தரப்படும்.
ஒவ்வொரு யானைக்கும் தினமும் ரூ.10ஆயிரம் செலவில் பராமரிப்பு பணி நடைபெறுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யானைகள் முகாமை முன்னிட்டு தேக்கம்பட்டி சுற்றுலா ஸ்தலமாகி உள்ளது.


பயணிகள் யானைகளை ரசிப்பதுடன் குடும்பத்துடன் அவற்றின் முன் நின்று செல்பி படங்களும் எடுத்து வருகின்றனர்.
மன்னார்குடி யானை செங்கமலத்தின் தலையில் முடிகள் காணப்படுகின்றன. மற்ற 32யானைகளுக்கு இல்லாமல் இந்த யானைக்கு மட்டுமே தலையில் முடிகாணப்படுகிறது.

யானை பராமரிக்கும் பாகன்கள் யானையின் முடியை பாப் கட்டிங் செய்து டை அடித்து பராமரித்து வருகின்றனர். இதனால் மன்னார்குடி யானை சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்துவருகிறது.

முகாமுக்கு செங்கமலம் வருகைதந்தபோது அதன் அருகே இருந்த மற்றொரு கோவில் யானை நிற்க முடியாமல் படுத்தே இருந்தது.
அதனால் வருத்தமுற்ற செங்கமலம் கண்ணீர்விட்டபடியே அதை எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது.
இந்த விடியோ வைரலாக சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here