சிறுவனின் 22லிட்டர் ரத்தம் உறிஞ்சிய நாடாப்புழுக்கள்!!

ஹைதராபாத்: 14வயது சிறுவனின் உடலில் 22லிட்டர் ரத்தத்தை குடித்த நாடாப்புழுக்கள் கண்டறியப்பட்டன. அவற்றை ஆபரேசன் செய்து அகற்ற டாக்டர்கள் முடிவெடுத்துள்ளனர்.
ஹைதராபாத்தை சேர்ந்த சர் கங்காராம் மருத்துவமனையில் 2ஆண்டுகளுக்கு முன் 12வயது சிறுவன் சிகிச்சை பெற வந்தான்.
அவன் உடல் ரத்தமின்றி சோகையாக இருந்தது.  பல்வேறு மருத்துவ பரிசோதனைகள், சிகிச்சைகள் அவனுக்கு அளிக்கப்பட்டன.


இருந்தபோதும் ஹல்த்வானியை சேர்ந்த அச்சிறுவன் 2 ஆண்டுகளாக உடல்நலம் தேறாமலேயே இருந்தான். அவனுக்கு அவ்வப்போது ரத்தமேற்றி வந்தனர் டாக்டர்கள்.
இந்நிலையில் அவனது உடலில் நுன்னிய கேமரா உதவியுடன் உணவுப்பாதையை டாக்டர்கள் சோதனையிட்டனர்.
சிறுகுடலுக்குள் நாடாப்புழுக்கள் ஒட்டிக்கொண்டிருந்தது தெரியவந்தது.

சாதாரணமாக வெள்ளைநிறத்தில் காணப்படும் இப்புழுக்கள் ரத்தத்தை குடித்ததும் சிறுகுடலின் வண்ணமாக மாறிவிடுகின்றன. இதனால் அவை புழுக்களா அல்லது நரம்புகளா என்று கண்டுபிடிப்பதில் டாக்டர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.
நாடாப்புழுக்கள் வயிற்றில் தங்குவது வழக்கம். இதனால் ரத்தக்கசிவு, சீதபேதி, வயிற்றுவலி ஆகியவை ஏற்படும்.

ஆனால், இச்சிறுவனின் குடல்பகுதிக்குள் புழுக்கள் சென்றதால் கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
கடந்த 2ஆண்டுகளாக அச்சிறுவனுக்கு 50யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். ஆபரேசன் செய்து புழுக்களை அகற்றிவிட திட்டமிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here