அரசு பஸ் டிரைவர் ரொம்பவே உஷார்! விடியோ!!

கோவை: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்த கோரி அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.

இருந்தபோதும் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.

இதற்கிடையே, போக்குவரத்து ஸ்டிரைக்கால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை அனுமதிக்க முடியாது. உடனடியாக ஊழியர்கள் பணிக்கு திரும்பவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இருப்பினும், தமிழகத்தில் பஸ் ஸ்டிரைக் 5வது நாளாக இன்றும் தொடர்கிறது.

கோவையில் அரசு பஸ்டிரைவர் சிவக்குமார் என்பவர் தலையில் ஹெல்மெட் அணிந்து வாகனங்களை ஓட்டி வருகிறார்.

நூதனமான அவரது இச்செய்கையை பயணிகள் விசாரித்தனர்.  அரசு எங்களுக்கு சம்பளம் உயர்த்தி தராமல் உள்ளது வருந்தத்தக்கது. எனது டிப்போவில் இருந்து நான் மட்டுமே பேருந்தை இயக்க வந்துள்ளேன்.

இதனால் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள எனது சக ஊழியர்களால் அடையாளம் காணப்பட்டு பிரச்சனைகள் ஏற்கப்படும். அதனை தவிர்க்கவே ஹெல்மெட் அணிந்துள்ளேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here