ஜிஎஸ்டி வரியால் நிதிச்சுமை! பாஜக அலுவலகத்தில் விஷம் குடித்தவர் பலி!

டெஹ்ராடன்: ஜிஎஸ்டி வரியை கண்டித்து பாஜக அலுவலகத்தில் விஷம்குடித்த நபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கடந்த 6ம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் ஜனதா தர்பார் நடந்தது.
அதில் டிரான்ஸ்போர்ட் நடத்தி வரும் பிரகாஷ்பாண்டே என்பவர் கலந்துகொண்டார்.


ஜிஎஸ்டி வரியால் தான் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டேன் என்று விளக்கினார்.
இதுகுறித்து பிரதமர், நிதியமைச்சர், மாநில முதல்வருக்கு கடிதம் எழுதினேன். ஆனால், பயன் இல்லைஎன்றும் அவர் கூறினார்.


ஜிஎஸ்டி வரிக்குப்பின்னர் தனது தொழில் நசிந்துவிட்டதை ஆதாரத்துடன் மனுவாக அவர் அளித்தார்.
தற்போது தனது குடும்பம் நிதிச்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Jeewan Mehraさんの投稿 2018年1月6日(土)

பின்னர் அங்கேயே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்நிலையில், கடந்த 3தினங்களாக சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here