ஓடும் பஸ்சில் பெண் டாக்டரிடம் சில்மிஷம்! பகீர் விடியோ!!

பத்தனம்திட்டை: ஓடும் பஸ்சில் பெண் டாக்டரிடம் சில்மிஷம் செய்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.

கேரளமாநிலம் பத்தனம் திட்டை என்ற ஊரில் இச்சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள மாவட்ட ஆயுர்வேத அரசு மருத்துவமனையில் பெண் டாக்டர் ஒருவர் பணியாற்றி வருகிறார்.

அவர் தினமும் அவ்வழியாக செல்லும் தனியார் பஸ்சில் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம்.

தனியார் பஸ் டிரைவர் நவுசத்(30). பெண் டாக்டரிடம் சில்மிஷம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதனை கண்டும் காணாமல் இருந்துள்ளார் டாக்டர்.

இதனால் தைரியம் பெற்ற நவுசத், டாக்டருக்கு தவறான சமிக்ஞைகள் காட்ட தொடங்கினார்.

இதனை தன்னுடன் பஸ்சில் வரும் தோழியிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார் டாக்டர். அத்தோழி டிரைவரின் அடாவடி நடவடிக்கையை  செல்போனில் படம் பிடித்தார்.  அதனை சமூக ஊடகத்தில் வெளியிட்டார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி டிரைவரை கைது செய்தனர். பத்தனம் திட்டை ஆர்டிஓ நவுசத்தின் டிரைவிங் உரிமத்தை 3மாதம் ரத்து செய்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here