நாட்டின் சிறந்த காவல் நிலையம்! கோவை காவல் நிலையத்துக்கு பரிசு!!

கோவை: கோயமுத்தார் ஆர்.எஸ்.புரம் காவல்நிலையம் நாட்டிலேயே சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது
மத்திய உள்துறை அமைச்சகம் இந்தியாவில் சிறந்த காவல்நிலையங்களை தேர்ந்தெடுக்க முடிவு செய்தது. மத்திய அரசின் போலிஸ் அராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை இதற்கான வரை முறைகளை வகுத்து கொடுத்தது.


அத்தகைய காவல்நிலையங்களின் பட்டியலை மத்திய அரசு தமிழக அரசிடம் கோரியது. அதன் பேரில் தமிழ்நாட்டில் இருந்து சென்னையில் உள்ள அண்ணாநகர் காவல் நிலையம் , கோவையில் உள்ள ஆர்.எஸ்.புரம காவல் நிலையங்களை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தது. இதில் ஆர்.எஸ்புரம் காவல் நிலையம் இந்தியாவில் மூன்று சிறந்த காவல் நிலையங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.


இதற்கான விருது மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் வழங்கப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விருதுகள் அளித்து கவுரவித்தார். முதல் சிறந்த காவல் நிலையத்திற்கான விருதினை ஆர்.எஸ்.புரம் நிலையத்தின் ஆய்வாளர் டி.ஜோதி பெற்றுக் கொண்டார்.

இந்த காவல் நிலையம் புகார்தர வரும் மக்களை வரவேற்கும் வரவேற்பறையில் இருந்து சுத்திகரித்த குடிநீர் , குழந்தைகள் விளையாடும் வகையில் காப்பகம் என பல்வேறு வசதிகளை கொண்டது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் டாப்10காவல் நிலையங்களில் 4வது இடத்தில் சென்னை அண்ணாநகர் கே4 காவல் நிலையம் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here