4ஜி டேட்டா அள்ளித்தருகிறது ஜியோ! புதிய ரிசார்ஜ் ப்ளான்கள் அறிமுகம்!!

மும்பை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புத்தாண்டு சலுகையாக பல்வேறு அதிரடி சலுகைகளுடன் ரிசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

4ஜி சேவையில் முன்னணி வகிக்கும் ரிலையன்ஸ் ஜியோ தனது முதலிடத்தை தக்கவைக்க அதிரடி திட்டங்களை கொண்டுவந்துள்ளது. ஜனவரி 9ம் தேதி முதல் இத்திட்டங்கள் நடைமுறைக்கு வருகின்றன.

புத்தாண்டை முன்னிட்டு 8 திட்டங்களில் சலுகைகள் வழங்கி வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
ரூ.199க்கான திட்டத்தை ரூ.149ஆக குறைத்துள்ளது. இத்திட்டத்தில் 28நாட்கள் தினமும் 1ஜிபி டேட்டா, இலவச அழைப்புகள், எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.


ரூ.459 திட்டம் ரூ.399ஆக குறைக்கப்படுகிறது. இதில் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற இலவச வாய்ஸ் கால் சேவை வழங்கப்பட்டது.
ரூ.399 ரிசார்ஜ் இனி ரூ.349க்கு செய்யலாம். அதில், 70 நாட்கள் தினமும் 1 ஜிபி டேட்டா, இலவச வாய்ஸ் கால் சேவை கிடைக்கும்.


ரூ.499 திட்டம் ரூ.449ஆக குறைக்கப்பட்டுள்ளது. 91 நாட்கள் வேலிடிட்டியுடன் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா, இலவச வாய்ஸ்கால் கிடைக்கும்.
இதேபோன்று ரூ.198, ரூ.498 ப்ளான்களில் வழங்கப்பட்டு வந்த தினமும் ஒரு ஜிபி டேட்டா 1.5ஜிபியாக அதிகரிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here