சமூக பிரச்சனைகளை தூண்டிவிடும் அரசு! பஹ்ரைனில் ராகுல்காந்தி பரபரப்பு பேச்சு!!

பஹ்ரைன்: இந்தியாவில் எழுந்துள்ள பிரச்சனைகளுக்கு உலகில் உள்ள அனைத்து இந்தியர்களும் இணைந்து உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் ராகுல்காந்தி.
பஹ்ரைனுக்கு சென்றுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி.


அங்குள்ள வெளிநாடு வாழ் இந்தியர் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
அவர் பேசியதாவது:
உங்கள் தாய்நாட்டில் மிகவும் முக்கியமான பிரச்சனைகள் தற்போது தலைதூக்கியுள்ளன.
இதற்கு உங்களது பார்வையில் தீர்வுகளை முன்வையுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தாங்கள் எந்த மாநிலம், மதம், இனம் என்ற அடையாளங்களை துறந்து இந்தியர்களாக பணியாற்றி வருகின்றனர்.


அவர்கள் தாய்நாட்டுக்கு எடுத்துவரும் பணம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.
காந்தியடிகள், அம்பேத்கர் போன்ற தலைவர்களும் வெளிநாடுவாழ் இந்தியர்களாக இருந்தவர்கள்தான்.


நாட்டின் தலையாய பிரச்சனையாக நான் கருதுவது வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன. கடந்த எட்டு ஆண்டுகளை விடவும் குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் நலனில் அக்கறை செலுத்தவேண்டிய அரசு, உண்மையை உணராமல் வெறுப்பை உமிழும் அரசியல் செய்துவருகிறது. வேலையில்லாத இளைஞர்களின் பயத்தை சமூக பிரச்சனையாக தூண்டிவிடும் பணியைத்தான் அரசு செய்துவருகிறது.


உண்மையை துணிந்துசொல்லும் நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் நசுக்கப்படுகிறார்கள். இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.
2நாட்கள் ராகுல்காந்தி பஹ்ரைனில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here