ஆந்திரா: கணவரை தீர்த்துக்கட்டினேன் என்று புன்னகைத்தபடியே மனைவி அளித்த பேட்டி ஆந்திரமாநில மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
குண்டூர் மாவட்டம் புனுகுப்பாடு கிராமத்தை சேர்ந்தவர் நரேந்திரா. இவர் மனைவி ஸ்ரீவித்யா.
ஆடம்பரமாக வாழ வேண்டும் என்பதில் ஸ்ரீவித்யாவுக்கு எப்போதும் விருப்பம். ஆனால், நரேந்திராவின் வேலை அதற்கு இடமளிக்கவில்லை.
இதனால் தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி பிரச்சனை எழுந்தது. கணவர் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருக்கும்போது ஆண் நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க தொடங்கினார் ஸ்ரீவித்யா.
3மாதங்களுக்கு முன் நரேந்திரா இறந்தார். அவர் அளவுக்கு அதிகமாக குடித்ததால் இறந்துவிட்டதாக கூறப்பட்டது. அவருக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன.
தங்கள் மகன் மரணத்தில் மர்மம் இருப்பதாக கருதி போலீசில் புகார் செய்தனர் நரேந்திராவின் பெற்றோர்கள்.
போலீசார் விசாரணையில், ஸ்ரீவித்யா தனது நண்பர்களுடன் சேர்ந்து நரேந்திராவை தீர்த்துக்கட்டியது தெரியவந்தது. அவரது நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.
தலைமறைவான ஸ்ரீவித்யாவை தேடிவந்தனர். இந்நிலையில் ஸ்ரீவித்யா போலீசாரிடம் பிடிபட்டார்.
குண்டூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இவ்வழக்கு தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அதிகாரியின் பின்னால் சிரித்துக்கொண்டே ஸ்ரீவித்யா நின்றிருந்தார். பின்னர் நிருபர்கள் அவரை தனிப்பேட்டி அளித்தார். அப்பேட்டியின்போதும் சிரித்துக்கொண்டபேசினார். இது செய்தியாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.