8பெண்களை திருமணம் செய்து ரூ.4.5கோடி மோசடி! பலே ஆசாமி கைது!!

கோவை: எட்டு பெண்களை திருமணம் செய்து ரூ.4.5கோடி மோசடி செய்த நபர் கைதானார்.
கோவை வெள்ளலூரை சேர்ந்தவர் புருஷோத்தமன்(57). கோவை காந்திபுரத்தில் டிரான்ஸ்போர்ட் வைத்துள்ளார்.


இவர் மனைவி இந்திராகாந்தி சென்னை கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.
சமீபத்தில் இவர் போலீசில் புகார் கொடுத்தார். அதில், தனது கணவர் புருஷோத்தமனிடம் பணமோசடி செய்தவர்களிடம் இருந்து பணத்தை மீட்டுத்தருமாறு கூறப்பட்டிருந்தது.

போலீசாரின் விசாரணையில் புருஷோத்தமனின் மோசடி விபரங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
அவர் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டவர் என்றும், எட்டாவது மனைவியாக இந்திராகாந்தியை திருமணம் செய்துகொண்டுள்ளார் என்றும் தெரியவந்தது.

இந்திராகாந்தியை திருமணம் செய்துகொண்டு மூன்றுமாதங்கள் ஆனபின்னர், தனதுதொழிலில் பண நெருக்கடி ஏற்பட்டது எனக்கூறியுள்ளார் புருஷோத்தமன். இந்திராகாந்தி பெயரில் உள்ள வீட்டை விற்று கடனை அடைத்தபின்னர் சென்னையில் சிறிதாக பிசினஸ் செய்து செட்டிலாகிவிடலாம் என ஆசைகாட்டியுள்ளார்.

இதனை நம்பி இந்திராகாந்தி தனது ரூ.1.5கோடி மதிப்புள்ள வீட்டை விட்டு கணவரிடம் பணம் கொடுத்துள்ளார். மூன்றே மாதங்களில் அப்பணத்தை தன்னிடம் மோசடி செய்துவிட்டதாக மனைவியிடம் தெரிவித்துள்ளார் புருஷோத்தமன்.

இவரது மனைவி உஷாராணி சில ஆண்டுகளுக்கு முன் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். இவருக்கு 18வயதில் மகள் உள்ளார்.
புருஷோத்தமன் இதேபாணியில் சபிதா, விமலா, சாந்தினி, சித்ரா, குமுதவள்ளி, சுசீலா ஆகிய பெண்களையும் ஏமாற்றியுள்ளார்.

கோவையை சேர்ந்த குமுதவள்ளியை மனைவியாக்கிய பின்னர், தனது ரூ.7கோடி நிலம் வழக்கில் சிக்கியுள்ளதாகவும், அதனை மீட்க பணம் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார். குமுதவள்ளியின் விளைநிலத்தை விற்று ரூ.3கோடி பணம்பெற்று மோசடி செய்துள்ளார்.

புருஷோத்தமனுக்கு வேலைக்கு சென்றுவரும் பணக்கார பெண்கள், 2வதுதிருமணத்துக்கு தயாராகவுள்ள பெண்கள் குறித்த தகவலை தந்து உதவியதாக கோவையை சேர்ந்த திருமண தகவல் நிலையம் நடத்திவரும் மோகன், வனஜா தம்பதியினரை போலீசார் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here