ஜப்பானில் ’மிஸ் பிட்காயின்’! சம்பளம் முழுவதையும் பிட்காயினாக வைத்துள்ளார்!!

டோக்கியோ: மிஸ் பிட்காயின் என்று சமூக ஊடகங்கள் ஜப்பானில் ஒரு பெண்ணை கொண்டாடி வருகின்றன.
32வயதுப்பெண் மாய் பியூஜிமொடோ தனது சம்பளப்பணம் முழுவதும் க்ரிப்டோ கரன்சி எனப்படும் இணையப்பணமாகவே சேமித்து வைத்துள்ளார்.

ஜப்பானில் பிட்காயின் எனப்படும் இணையப்பணம் வைத்துக்கொள்ள அனுமதி உண்டு.
கடந்த டிசம்பரில் அந்நாட்டு கரன்சியான யென் – ஐ விடவும் பிட்காயினின் மதிப்பு உயர்ந்தது.
சீனா, தென்கொரியா ஆகிய நாடுகள் க்ரிப்டோ கரன்சி மீது கெடுபிடி காட்டின.


ஆனால், காலத்துக்கேற்ற கரன்சி என்று பிட்காயினை கொண்டாடியது ஜப்பான்.
கடந்த ஏப்ரல் மாதம் இதற்காக தனிச்சட்டமே இயற்றியது.
தற்போது பணியாளர்கள் விருப்பப்பட்டால் பிட்காயினாகவே தங்கள் சம்பளத்தை ஜப்பானில் பெறமுடியும்.
பாரக்ஸ் எனப்படும் அந்நியச்செலாவணி சந்தையில் வர்த்தகம், முதலீடு செய்வோர் அனைவரும் தற்போது க்ரிப்டோ கரன்சிகளிலும் முதலீடு செய்து வருகின்றனர்.

மாய் பியூஜிமொடோ 2012ம் ஆண்டில் முதன்முறையாக பிட்காயின் வாங்கினார் அப்போது ஒரு பிட்காயின் விலை பத்து டாலர். தற்போது அதன் விலை 16ஆயிரத்து 720டாலராக அதிகரித்துள்ளது.


குழந்தைகள் அறக்கட்டளை ஒன்றில் பணியாற்றிவரும் மாய்பியூஜிமொடோ வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதற்கு எளிய சிறந்த வழியாக பிட்காயினை தேர்வு செய்தார். பின்னர் அதிலேயே முதலீடு செய்ய ஆரம்பித்தார். தனது மொத்த சேமிப்பையும் பிட்காயினாகவே வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here