ரஜினியை கலாய்க்கும் சாருஹாசன்!

சென்னை: நடிகர் ரஜினியை கலாய்க்க தயாராகி வருகிறார் நடிகர் கமலின் சகோதரர் சாருஹாசன்.
ரஜினி, ரசிகர்கள் சந்திப்பின்போது நிருபர் தனது கட்சியின் கொள்கைபற்றி கேட்டதும் ‘ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு’ என்றார்.


இது சமூக ஊடகங்களில் பலமாக கிண்டலடிக்கப்பட்டது. ட்விட்டரில் தொடர்ந்து முதலிடம் பிடித்துவந்தது.


இந்த பிரபலத்தை தங்கள் திரைப்படத்துக்கு பயன்படுத்த தயாராகி உள்ளது தாதா87 படக்குழு.
கலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சாருஹாசன், சரோஜா (நடிகை கீர்த்தி சுரேஷ் பாட்டி), ஜனகராஜ் நடிப்பில் விஜய் ஸ்ரீ இயக்கும் படம் ‘தாதா 87’.


இப்படத்தில் ‘ஒரு நிமிஷம் தலைசுத்தும்’ என்று ஒரு பாடல் இடம்பெறுகிறது. இப்பாடல் பொங்கலன்று வெளியாகிறது.
இப்பாடலை இயக்குநர் விஜய்ஸ்ரீ எழுதியுள்ளார். சாருஹாசன், நவின் ஜனகராஜ் பாடியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here