வங்கிகளுக்கான ஆப் பயன்படுத்துகிறீர்களா? உஷார்! உஷார்!!

மும்பை: வங்கி சேவைக்காக ஆப் பயன்படுத்துவோர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பணப்பரிமாற்றம் செய்யப்படும் 232 வங்கிச்சேவை ஆப்கள் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்புள்ளதாக பிரபல குயிக்ஹீல் செக்யூரிட்டி லேப் நிறுவனம் எச்சரித்துள்ளது.


எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி, ஹெடிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பிரபல வங்கிகளின் ஆப்களை உடைத்து அதன் வழியாக பணம், தகவல் கொள்ளையடிக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி தகவல்களை பாதுகாப்பதாக சிலர் விளம்பரம் செய்துகொண்டு சில ஆப்களை விற்பனை செய்தும், இலவசமாக வழங்கியும் வருகின்றனர்.


அத்தகைய ஆப் மற்றும் டூல்களில் உஷாராக இருக்க வேண்டும்.
அவை மால்வேராக மாறி தகவல்களை சுருட்டிக்கொண்டு சென்றுவிடும்.
இவ்வகையான ஆப்களை செல்போனில் நிறுவியதும் வங்கிச்சேவைக்கான பாஸ்வேர்டு தாருங்கள் என்று கேட்கும் அல்லது வங்கியில் இருந்து வந்ததுபோன்ற மெயில் வரும். அப்போது உஷாராகி விடவேண்டும்.
நாம் நிறுவிய ஆப்பை உடனடியாக அழித்துவிடவேண்டும்.


வங்கிகள் ஆப்பை பயன்படுத்துவோர் முக்கியமான 5 விஷயங்களை எப்போதும் கடைபிடிக்க வேண்டும்.
# இலவச எஸ்.எம்.எஸ். மற்றும் மெயில் சேவை அளிக்கிறோம் என்று கூறும் ஆப்களை பயன்படுத்தக்கூடாது.
# தெரியாத இடங்களில் இருந்துவரும் ஆப் களை நிறுவக்கூடாது என்ற ஆப்ஷனை மொபைலில் எப்போதும் தேர்வு செய்து வைத்திருக்க வேண்டும்.


# ஆப்களை கூகுள் ப்ளே போன்ற அதிகாரப்பூர்வமான இடங்களில் இருந்தே டவுன்லோடு செய்து நிறுவ வேண்டும்.
#மொபைல் செக்யூரிட்டிக்கான ஆப்பை நிறுவி இருக்க வேண்டியது அவசியம்.
# செல்போனின் ஆபரேடிங் சிஸ்டத்தையும், செக்யூரிட்டி ஆப்பையும் எப்போதும் அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here