சச்சின் மகளை கடத்துவதாக மிரட்டல்!

கொல்கத்தா:சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவை கடத்துவதாக மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
பிரபல கிரிக்கெட் வீரர், ராஜ்யசபா எம்.பி., சச்சின் டெண்டுல்கர். அவரது மகள் சாரா. அவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட வாலிபர் ஒருவர் ஆபாசமாக பேசியுள்ளார்.

சாராவை கடத்தப்போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார். சுமார் 20க்கும் மேற்பட்ட முறை தொலைபேசியில் சச்சின் வீ்ட்டிற்கு தொடர்பு கொண்டு இவ்வாறு பேசியுள்ளார்.

இது தொடர்பாக டெண்டுல்கர் குடும்பத்தினர் மும்பையின் பந்த்ரா போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தனர். விசாரணை நடத்திய போலீசார், போனில் பேசியவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தேவ்குமார் மைதி என தெரியவந்தது.

இதனையடுத்து மும்பை மற்றும் மேற்கு வங்க மாநில போலீசார் இணைந்து, கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் தேவ்குமார் மைதியை கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here