சவுதி அரசர் அரண்மனை முற்றுகை! 11 இளவரசர்கள் கைது!!

ரியாத்: சவுதி மன்னரின் அரண்மனை முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 11இளவரசர்கள் கைது செய்யபட்டனர்.
எண்ணெய் வள நாடான சவுதிஅரேபியாவில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன.
பட்டத்து இளவரசர் முகமதுபின் சல்மான் அதில் தீவிரமாக உள்ளார்.


கடந்த ஆண்டு டிசம்பரில் ஊழலை ஒழிப்பதற்காக சிறப்புக்குழு பட்டத்து இளவரசர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவுக்கு வானளாவிய அதிகாரம் தரப்பட்டுள்ளது.
அக்குழுவின் நடவடிக்கையால் முறைகேடான வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டதாக அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.


தற்போது, சவுதி அரேபியா அரசு நிதிச்சிக்கனத்தை கருத்தில்கொண்டு அரச குடும்பத்தின் உறவினர்களுக்கு வழங்கிவந்த பல சலுகைகளை ரத்து செய்தது.


அதனை எதிர்த்து அரசகுடும்பத்தை சேர்ந்தவர்கள் அரண்மனையை முற்றுகையிட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here