ஹஜ் அலுவலக சுவர்களுக்கு மீண்டும் வெள்ளைப்பூச்சு!

லக்னோ: உத்தர பிரதேசத்தில் உள்ள ஹஜ் அலுவலக சுவர்களுக்கு காவி வர்ணம் பூசப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடந்துவருகிறது. தலைமைச் செயலகத்துக்கு அருகேயுள்ள, முஸ்லிம்களின் அமைப்பான ஹஜ் அலுவலகத்தின் வெளிப்புற சுவருக்கு காவி வர்ணம் பூசப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் நடத்தும் மதரசாக்களுக்கான விடுமுறை காலத்தை குறைத்து மாநில அரசு அறிவித்தது சர்ச்சையை நிலவிவரும் வேளையில், ஹஜ் அலுவலகத்தின் வெளிப்புற சுவருக்கு காவிவர்ணம் பூசப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர், மோஷின் ராசா கூறியதாவது: காவி நிறம் தேசத்துக்கு எதிரான நிறமில்லையே? அது கடவுள் அளித்த பரிசு; சூரியனின் முதல் கதிர்கள் காவி நிறத்திலேயே இருக்கும். நமக்கு நம்பிக்கையையும், மன உறுதியையும் தரக் கூடியது.

பிரகாசம், சக்தியை அது பிரதிபலிக்கிறது.இந்த நிறத்தை நீக்க வேண்டும் என்று கூறுபவர்கள், நாளை, தேசியக் கொடியில் இருந்தும் அதை நீக்கச் சொல்வரா?
அரசு கட்டடங்களுக்கு தானே காவி வர்ணம் பூசிஉள்ளோம். யாருடைய சொந்த கட்டடத்திலும் பூசவில்லையே. இதில் என்ன சர்ச்சை உள்ளது? இவ்வாறு அவர் கூறினார்.
இருப்பினும் காவி வர்ணத்தின் மீது மீண்டும் வெள்ளையடிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here