ராணுவ வீரர்களின் சீருடை விற்பனை! அதிர்ச்சி தகவல்!!

ராஜஸ்தான்: ராணுவ வீரர்கள் அணியும் சீருடை சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் விபரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பிகானிர் பகுதிகளில் உள்ள கடைகளில் ராணுவ வீரர்களின் சீருடை என்றே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ரூ.1000 வரை ராணுவச்சீருடைகள் விற்படுகிறது.
அது மட்டுமின்றி ராணுவ வீரர்கள் அணியும் பூட்ஸ், பெல்ட்டுகள், ஜாக்கெட்களும் கிடைக்கின்றன.

இது குறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ராணுவ சீருடைகளை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் இருந்து வாங்கி விற்பவர் முறையாக உரிமம் வைத்திருக்க வேண்டும் என்பது விதி.

ராணுவ சீருடையை வாங்குபவரின் முழு முகவரி உள்ளிட்ட அடையாளங்களை விற்பவர் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் .
சட்டவிரோதமாக ராணுவச்சீருடைகளை விற்பது தவறு. அதே வேளையில் பொதுமக்கள் ராணுவ சீருடையை வாங்கி அணிந்து கொள்வதும் சட்டவிரோதம் என்றார்.

கடந்த 2016-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் பதன்கோட், குருதாஸ்பூர் ஆகிய இரு இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அவர்கள் இந்திய ராணுவத்தினரை போன்ரே சீருடை அணிந்துவந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here