யானையாக இருந்தாலும்… ’மதம்’பிடிக்க விடமாட்டேன்! கமலஹாசன் பேட்டி!!

மலேசியா: நடிகர் சங்க நட்சத்திர கலைவிழாவில் பங்கேற்றார் கமலஹாசன். நடிகர் விவேக்கின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
அவரது சுவாரஸ்ய பதில்கள் விபரம்:

#களத்தூர் கண்ணம்மாவில் சொன்னதை சொல்லும் கிளியாக இருந்தேன். அப்போது ஒரு குழந்தை. அதன்பின்னர் காதல் மன்னன் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. அதிலும் கொஞ்ச காலம் வாழ்ந்து பார்த்துவிட்டேன். மற்றபடி களமிறங்கும் கமல், அது என் குரல், உங்கள் குரல். என்னை பேச வைத்து கொண்டிருக்கும் குரல் எல்லாம் மக்களின் குரல் தான்.

#யானையாக இருந்தால் கூட மதம் பிடிக்காமல் தான் பார்த்து கொள்வேன்.

#வயது கூட கூட ஞானமும், அனுபவமும், அறிவும் கூடும், அதை பகுத்தறியும் திறனும் கூடியே தீரும்.

#டுவிட்டரில் நான் சொல்ல வேண்டியதை அழுத்தி சொல்ல வேண்டும் என்பதற்காக சில நல்ல தமிழ் சொற்களை உபயோகிக்கிறேன். அது சில தமிழ் அறிஞர்களுக்கு புரிவதில்லை.

#எனக்கு எது தேவை என்பதே தெரியாமல் தான் இன்னமும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.
#எனக்கான தகுதி என்ன என்பதை ரசிகர்களின் கரகோஷம் தான் உணர்த்துகிறது. அதை நான் பெற்றுவிட்டேனா என்பது தெரியவில்லை. அதற்கான முயற்சியில் தொடர்ந்து கொண்டே இருப்பேன்.
#தேவை என்பது மனிதனுக்கு எல்லையில்லா ஒரு விஷயம். இது போதும் என்று நினைத்துவிட்டால் அவன் ஞானி ஆகிவிடுவான்


#கணுக்கால் கூட நனையாமல் இருக்க வேண்டும் என்று தான் இருந்தேன். ஆனால் சென்னையில் எப்படி வௌ்ளம் தாக்கி, தண்ணீரில் மூழ்கடித்ததோ… அதுபோல் இந்த சமூக அவலம் தாக்கி எங்களை கழுத்தளவு தண்ணீரில் தள்ளி உள்ளது.

#எங்களை சுற்றி அழுக்கான சில அசுத்தங்கள் சூழ்ந்து கொண்டுள்ளன. அதிலிருந்து மேம்படுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளோம். இது தனி மனித ஒருவனால் செய்ய முடியாது, அதற்கு தமிழர்களாகிய நீங்களும் இணைந்து செயலாற்றுவோம்.

#எனக்கும் ரஜினிக்கும் இரண்டாவது வீடு என்று சொல்லும் அளவுக்கு மலேசியா உள்ளது. மறக்க முடியாத முதல் பயண அனுபவம் நிறைய இருக்கிறது.

#என் அம்மா நிறைய ஜோசியம் பார்ப்பார்கள். ஆனால் அதை பொய்யாக்கி இருக்கிறேன். அதை எனக்கு கற்றுக் கொடுத்தவர்கள் நிறைய பேர் உள்ளார்கள்.

#இருந்தான், வந்தான், சென்றான் என்றில்லாமல் இருக்கிறான் என்ற நிலையில் நிறைவு கொள்ள விரும்புகிறேன்.

#உலகத்தின் மையமாக மலேசிய மக்கள் உள்ளனர். அதில் நானும் உண்டு. அதை மலேசிய மக்கள் மறந்து விடாதீர்கள். நீங்கள் தேட வேண்டியது, தலைமையை அல்ல திறமையை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இவ்வாறு கமலஹாசன் பேட்டியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here