செல்போன் பார்த்தபடிவந்த பெண்! லிப்டில் சிக்கி காலை இழந்தார்!!

பீஜிங்:செல்போன் பார்த்தபடியே வந்த பெண் லிப்டில் சிக்கி காலை இழந்தார்.
இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது ஷாங்காய் நகரில் உள்ள காஞ்ச் கட்டிடத்தில்.
இக்கட்டிடத்தின் 3வது மாடியில் வணிக நிறுவனம் உள்ளது.

அதில் பணியாற்றிவரும் ஐகியி மதிய உணவுக்காக தோழியுடன் லிப்டில் ஏறவந்தார்.
அவர் தனக்கு வந்த மெசேஜ்களை செல்போனில் பார்த்துக்கொண்டே லிப்டில் ஏற முயன்றார்.
அதற்கு முன்னரே அவரது தோழி லிப்டுக்குள் நுழைந்தார்.


இதனால் லிப்டின் கதவுகள் பூட்டிக்கொண்டன. அதில் ஐகியி-ன் கால் சிக்கிக்கொண்டது.
நீண்டநேரம் போராடி அவரது கால் விடுவிக்கப்பட்டது.


இதுகுறித்து ஐகியின் தோழி கூறுகையில், லிப்ட் கதவுகள் அடைக்கப்படுவதை நானும், ஐகியும் கவனிக்கவில்லை. இதனால் விபத்து நேர்ந்துவிட்டது.
ஐகியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் செயற்கைக்கால் பொருத்தவேண்டும் என்று பரிந்துரைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here