மக்களுக்கு உதவ எம்.எல்.ஏ வின் டிரைவர் அவதாரம்!

அந்தியூர்: அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்கால் தவித்த பயணிகளுக்கு ஆபத்தில் உதவுபவராக அவதாரம் எடுத்தார் எம்.எல்.ஏ. ராஜா.
அந்தியூர் அதிமுக எம்.எல்.ஏ. ராஜா தாமாக முன்வந்து அரசு பஸ்சை இயக்கினார்.

 

போக்குவரத்து தொழிலாளர்களுடனான அமைச்சரின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து, நேற்று இரவு முதல் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பேருந்துகள் இயங்கவில்லை. 2வது நாளாக பஸ் ஸ்டிரைக்கால் மக்கள் பாதிப்புக்குள்ளாயினர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பேருந்துகள் நிறுத்தப்பட்டு பயணிகள் அவதிக்குள்ளாயினர்.
மதியம் 3மணியளவில் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.


அந்தியூர் அதிமுக எம்.எல்.ஏ. ராஜா கிருஷ்ணன் தாமாக முன்வந்து பேருந்து இயக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அவர் அந்தியூரில் இருந்து ஈரோடு செல்லும் பேருந்தை இயக்கினார்.
பயணிகள் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here