பாத்திரக்கடை, மல்டிலெவல் மார்க்கெட்டிங்! பிச்சைக்காரரின் சைட் பிசினஸ்!!

ஜார்கண்ட்: ரயில் நிலையம், செவ்வாய், வெள்ளி விசேஷ நாட்களில் கோவில் என்று பிச்சையெடுத்து வரும் நபர் பிசினசில் கொடி கட்டிப்பறக்கிறார்.

3மனைவிகளுடன் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தி வருகிறார்.

இந்த ஆச்சர்யத்துக்கு சொந்தக்காரர் சோட்டு பைராக்(40). ஜார்கண்ட் மாநிலம் தலைநகர் ராஞ்சியில் வசித்து வருகிறார்.

பிறவிக்குறைபாட்டால் பாதிக்கப்பட்ட இவர் சிறுவயதில் இருந்தே இத்தொழிலில் இறங்கிவிட்டார்.

மாதம் ஒன்றுக்கு ஆயிரம் என்று சம்பாதித்தவர் இப்போது மாத வருமானம் 30ஆயிரம் ரூபாயை கடந்துவருகிறது.

தனது வருவாயை பெருக்க பெரிதாக திட்டமிட்டார் சோட்டு பைராக். ராஞ்சி மார்க்கெட்டில் மனைவி பெயரில் பாத்திரக்கடை துவக்கினார். தற்போது முதல்மனைவி அக்கடையை கவனித்து வருகிறார்.

அடுத்த இரு மனைவிகளும் சகோதரிகள். அவர்களுக்கு மார்க்கெட்டிங் நுணுக்கங்களை சொல்லித்தந்துள்ளார் சோட்டு பைராக். அவர்கள் மல்டி லெவல் மார்க்கெட்டிங்கில் தற்போது கொடிகட்டிப்பறக்கிறார்கள்.

Close-up of an elderly beggar’s hand holding a cup.

ஓய்வு என்பதே எனக்கு கிடைக்காது.  காலையில் எழுந்ததும் ரயில் நிலையம். அடுத்து பாத்திரக்கடை, மதியம் மார்க்கெட்டிங், இரவு கணக்கு வழக்கு பார்ப்பது என்று நேரத்தை சரியாக பயன்படுத்தி வருகிறேன் என்று சொல்கிறார் சோட்டு.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here