துப்பாக்கி முனையில் வாலிபருக்கு திருமணம்!!

பாட்னா:பீகார் மாநிலத்தில் வாலிபர் கடத்திச்செல்லப்பட்டு துப்பாக்கி முனையில் திருமணம் செய்துவைக்கப்பட்டார்.
பாட்னாவில் உள்ள போகாரோ நிறுவனத்தில் சீனியர் மேனஜராக வேலைப்பார்த்து வருபவர் வினோத் குமார்.
டிசம்பர் மாதம் 3ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஹதியா-பாட்னா விரைவு ரெயிலில் சென்றார்.


பண்டாரக் பகுதியைச் சேர்ந்த சிலர் கடத்திச் சென்று ஒரு பெண்ணிற்கு கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இதுகுறித்து வினோத்தின் சகோதரர் சஞ்சய்குமாருக்கு போனில் தகவல் சொல்லப்பட்டுள்ளது.
சஞ்சய் குமார் உள்ளூர் போலீசின் உதவியுடன் வினோத்தை மீட்டு அழைத்து வந்தார்.


வினோத் கண்ணீர் மல்க தாலி கட்டிய புகைப்படங்கள் இணையதளங்களில் பரவி வருகின்றன.
அந்த பெண்ணை மனைவியாக ஏற்றுக்கொள்ளுமாறு வினோத்தின் குடும்பத்திற்கு மிரட்டல்கள் வந்துள்ளன.


வினோத் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்து, தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here