விமானத்தில் இருந்து குதித்து இறங்கியவர் கைது! பரபரப்பு விடியோ!!

பார்சிலோனா: விமானத்தின் அவசரவழியை திறந்து குதித்த நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவம் நடந்துள்ளது பார்சிலோனாவில் உள்ள மலாகா விமான நிலையத்தில்.
லண்டனில் இருந்து மலாகாவுக்கு வந்த எப்8164 விமானத்தில் 86பயணிகள் இருந்தனர்.

விமானம் அரை மணிநேரம் தாமதமாக விமான நிலையத்துக்குள் வந்திறங்கியது.
விமானத்தின் கதவுகள் திறக்கப்படவில்லை. புத்தாண்டை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு விமானங்களில் வந்திறங்கிய பயணிகளுக்காக பேருந்துகள் இயக்கப்பட்டதால் லண்டன் விமானத்தின் பயணிகளை இறக்கி அழைத்துச்செல்வதில் தாமதம் ஏற்பட்டது.

இது தெரியவந்த விக்டர்(56) என்ற பயணி அவசர வழியை திறந்தார். விமானத்தில் இருந்து குதித்து வெளியேறினார்.
இதனை கண்காணிப்பு கேமராவில் பார்த்த போலீசார் அவரை கைது செய்தனர்.

விசாரணையில், அவர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டதால் தூய காற்றை சுவாசிக்க விமானத்தில் இருந்து குதித்ததாகவும் தெரிவித்தார்.
அவருடன் பயணித்த சகபயணியும், விமான பயணத்தின்போதே விக்டர் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டார் என்று தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here