குறைந்த விலையில் 4ஜி போன்! ஏர்டெல் அதிரடி அறிமுகம்!!

மும்பை: ஏர்டெல் நிறுவனம் 4ஜி ஸ்மார்ட்போன்களை சலுகைவிலையில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.
4ஜி அலைவரிசை தொழில்நுட்பம் இந்தியாவில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஜியோவின் அழைப்புகள் இலவசம், டேட்டாவுக்கு மட்டுமே காசு., குறைந்தவிலை செல்போன் போன்ற புதுமைத்திட்டங்கள் அதே வழிமுறையை பிற நிறுவனங்களும் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏர்டெல் நிறுவனம் ஐடெல் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களை எனது சிறந்த ஸ்மார்ட்போன் என்று விளம்பரம் செய்து விற்க முன்வந்துள்ளது.


மேலும் கார்பன், செல்கான், இண்டெல் நிறுவனங்களுடன் இணைந்தும் 4ஜி போன்களை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஐடெல் ஏ40, ஐடெல் ஏ41 என்ற இருமாடல் செல்போன்கள் விற்பனைக்கு வந்துள்ளன.


அவற்றை வாங்குவோருக்கு ரூ.1,500வரை ரொக்க சலுகை கிடைக்கும். மாதந்தோறும் ரூ.500 ரிசார்ஜ் தொடர்ந்து 18மாதங்கள் செய்த பின்னர் பணச்சலுகை கிடைக்கும்.
ஐடெல் ஏ40 மாடல்போன் விலை ரூ.4,599 என்றும்., ஐடெல் ஏ41 மாடல்போன் விலை ரூ.4,699 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த போன்கள் 5இஞ்ச் டிஸ்ப்ளே, ஒரு ஜிபி ராம், 8ஜிபி நினைவகம், 2கேமராக்கள், வைபை, ப்ளூடூத் வசதி கொண்டவை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here