கேப்டனை வீழ்த்தி பழிதீர்த்தது தென்னாப்ரிக்கா!

கேப்டவுண்: இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலாண்ட்ஸ் ஸ்டேடியத்தில் தொடங்கியது.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆட்டம் தொடங்கியதுமே தென் ஆப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர்கள் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.


முதல் 5 ஓவர்களிலே புவனேஷ்வர்குமார் மூன்று விக்கெட்களை வசமாக்கினார்.
டீன் எல்கர், மார்க்ராம், அம்லா விக்கெட்களை வீழ்த்தி தென் ஆப்பிரிக்காவிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் புவனேஷ்வர் குமார்.


தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 73.1 ஓவர்களில் 286 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. இதில் கடைசி 5 வீரர்கள் 102 ரன்கள் திரட்டியது குறிப்பிடத்தக்க வி‌ஷயமாகும். இந்திய தரப்பில் புவனேஷ்வர்குமார் 4 விக்கெட்டுகளும், அஸ்வின் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.


இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது. தென் ஆப்பிரிக்க வீரர்கள் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களையும் வேகமாக வெளியேற்றிவிட்டனர்.

முரளி விஜய், தவானை அடுத்து 8.1 வது ஓவரில் விராட் கோலி 5 ரன்களில் வெளியேறினார். இந்தியா 9 ஓவர்களுக்கு 3 விக்கெட்டை இழந்து 27 ரன்களுடன் விளையாட்டி வருகிறது,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here