Connect with us

International

முதல் நாள் திருமணம்! மறுநாள் மரணம்! கேன்சர் நோயாளியின் கண்ணீர் கதை!!

Published

on

வாஷிங்டன்:மருத்துவமனையில் வைத்து திருமணம் செய்துகொண்ட பெண் மறுதினம் இறந்தார்.
மனதை நெகிழவைக்கும் இச்சம்பவம் அமெரிக்காவில் உள்ள ஹார்ட்போர்டு கேன்சர் மருத்துவமனையில் நடந்துள்ளது.


அம்மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் சிகிச்சைக்கு சேர்ந்தார் ஹீதர் மோஷர்.
ஆசிரியையாக வேலை பார்த்து வந்த அவர் நடன வகுப்பில் டேவிட்டை சந்தித்தார்.
இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தனர்.
2016 டிசம்பர் 26ல் அவர்கள் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டனர்.


அன்றைய தினம் ஹீதர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரியவந்தது. இதனால் திருமணம் தள்ளிவைக்கப்பட்டது.
அதன்பின்னர் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் பணியில் ஹீதர் தீவிரமானார். அவருக்கு உதவியாக டேவிட் இருந்துவந்தார்.
ஹீதருக்கு கீமோ தெரபி, அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.


இருப்பினும் கடந்த செப்டம்பர் மாதம் புற்றுநோய் அவரது மூளைவரை பரவியது கண்டறியப்பட்டது.
ஹார்ட்போர்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், டாக்டர்கள் அவர் எப்போது வேண்டுமானாலும் இறந்துவிடலாம் என தெரிவித்தனர்.
இவ்விபரம் ஹீதருக்கும் தெரியவந்தது. அவர் டேவிட்டை திருமணம் செய்ய விரும்பினார்.


கடந்த 22ம்தேதி மணப்பெண்ணாக ஹீதர் அலங்கரிக்கப்பட்டார். அவருக்கு ஆக்சிஜன் தொடர்ந்து அளிக்கப்பட்டுவந்தபோதும் டேவிட்டுடன் மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொண்டார்.
தனது சந்தோஷத்தை அனைவருடனும் பகிர்ந்துகொண்டார்.
15மணிநேரம் கழித்து அடுத்த நாள் டிசம்பர் 23ம் தேதி அவர் இறந்துவிட்டார். கதறியழுத டேவிட்டை மருத்துவர்களும், உறவினர்களும் தேற்றினர்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator