பைக் ரேஸ் கும்பல் அட்டூழியம்! 4தனிப்படை போலீஸ் விசாரணை!!

சென்னை: சாலைத்தடுப்பு தட்டியை தீப்பொறி பறக்க இழுத்துச்சென்று அட்டகாசம் செய்த பைக் ரேஸ் கும்பலைப்பிடிக்க சென்னையில் 4தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மெரினா காமராஜர் சாலை மற்றும் காந்தி மண்டபம் சாலையில் பைக் ரேஸ் வெறியர்கள் சாலைத் தடுப்புக்கு அமைக்கப்பட்டுள்ள பேரி கார்டுகளை வெகுதூரம் தீப்பொறிபறக்க இழுத்துச் சென்றுள்ளனர்.

இதனால் அந்தச்சாலை வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அனைவரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாயினர்.

சுமார் 2 கி.மீ தூரத்துக்கு அத்தட்டியை இழுந்தவந்த வாலிபர்கள் நடுவே அதனை போட்டுவிட்டுச்சென்றனர்.

அதுதொடர்பான விடியோ வைரலாகி வருகிறது.

Jeawul Megrusさんの投稿 2018年1月3日(水)

Jeawul Megrusさんの投稿 2018年1月3日(水)

காவல்துறை இயக்குனர் அலுவலகம் இருக்கக் கூடிய பகுதியிலேயே அட்டகாசம் செய்த பைக் ரேஸர்களைப் பிடிக்க வேண்டும் என்று  மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை அடுத்து, பைக் ரேஸ் வெறியர்களைப் பிடிக்க 4 தனிப்படைகளை போக்குவரத்து காவல்துறையினர் அமைத்துள்ளனர்.

இருப்பினும் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அத்துமீறிய பைக் ரேஸ் வெறியர்கள் பற்றி 90031 30103 என்ற போக்குவரத்துக் காவல் கட்டுப்பாட்டு அறை செல்போன் எண்ணை தொடர்புகொண்டோ அல்லது வாட்ஸ் ஆப்பிலோ தகவல் தெரிவிக்குமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

video courtesy:facebook

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here