காதலியுடன் சுற்றித்திரியும் கணவன்! மனைவி கொடுத்த பதிலடி!!

டெக்சாஸ்:  காதலியுடன் சுற்றித்திரியும் கணவருக்கு மனைவி கொடுத்த பதிலடி இணையத்தில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சபைன் கவுண்டி பகுதியை சேர்ந்த பெண் திமேஷியா ப்ரவுன்.
இவருக்கும் பேட்ரிக்குக்கும் 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.


திருமணத்துக்குப் பின்னர் தான் திமேஷியாவுக்கு  தனது கணவருக்கும் அவருடன் பணியாற்றிவந்த ஒருவருக்கும் இடையே காதல் இருந்த விபரம் தெரியவந்தது.

 

இதனால் திமேஷியாவும், பேட்ரிக்கும் மனதளவில் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
பேட்ரிக் தனது காதலி சகாரா வீட்டில் தங்கியுள்ளார். இதனால் கோபம் கொண்ட திமேஷியா அவரை பழிவாங்க நினைத்தார்.


தங்கள் பகுதியில் அதிகம் விற்பனையாகும் நாளிதழ் ஒன்றில் விளம்பரம் தந்தார்.

அதில் பேட்ரிக் ப்ரவுனையும், சஹாராவுக்கும் வாழ்த்துக்கள். அவர்கள் தங்கள் குழந்தையை எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரியவந்தது. இருவரின் அன்பினால் இது சாத்தியமானது. எப்போது பேட்ரிக்கின் மனைவி திமேஷியா. இவ்வாறு விளம்பரத்தில் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த பத்திரிகை விளம்பரம் சமூக வலைத்தளம் வாயிலாக உலகம் முழுவதும் பகிரப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here