காலம் முழுவதும் கரமாக இருப்பேன்! மருத்துவமனையில் காதல் நெகிழ்ச்சி!!

தைவான்: காலம் முழுவதும் உன் கையாக இருப்பேன் என்று தனது காதலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காதலனிடம் கூறியுள்ளார் காதலி.

நெகிழ்ச்சி தரும் இக்காதல் தருணம் நடந்தது நியூ தைபே நகரத்தில் அங்குள்ள தனியார் மருத்துவமனையின் யங் இங் (27) அனுமதிக்கப்பட்டார்.

இவர் தன்னுடன் வேலைபார்த்துவந்த பெண்ணை காதலித்தார்.  கடந்த மாதம் நண்பர்களுடன் காரில்சென்றுகொண்டிருந்தபோது யங் கிங் விபத்தை சந்தித்தார்.

அதில் உடல் முழுவதும் அவருக்கு காயங்கள் ஏற்பட்டது.  அவரது கையை எடுத்துவிட்டு செயற்கை பொருத்தியுள்ளனர் டாக்டர்கள்.

 

இதனால் அச்சம் கொண்ட அவர் காதலை துறக்க முடிவு செய்தார்.  இவ்விபரம் தெரியவந்த அப்பெண் மருத்துவமனைக்கு வந்தார்.

திருமண அலங்காரத்தில் உடன் பணியாற்றிவரும் நண்பர்களுடன் காதலியை பார்த்ததும் யங் இங் நெகிழ்ச்சி அடைந்தார்.

அப்பெண், நீ என்னை திருமணம் செய்துகொள்ள தயார் என்றால் இப்பூக்களை வாங்கிக்கொள்.  காலம் முழுவதும் உன்கையாக இருப்பேன் என்றார்.

பூக்களை வாங்கிக்கொண்டு அவரை முத்தமிட்ட யங் இங். உன் கரங்களை பிடித்துக்கொண்டே காலம் முழுவதும் வாழ்வேன் என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here