Connect with us

india

கூரையில் இருந்து வீசி தாய் கொலை? பேராசிரியர் கைது!!

Published

on

ராஜ்கோட்: பெற்றதாயை கூரையில் இருந்து வீசி கொலை செய்தார் என்று பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் இக்கொடிய சம்பவம் நடந்துள்ளது.


ராஜ்கோட் நகர் காந்திகிராம் பகுதியில் தர்ஷன் அவன்யூ என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
அதில் மகனுடன் வசித்துவந்தவர் ஜெய்ஸ்ரீபென்(65). இவரது மகன் சந்தீப் கல்லூரியில் பேராசிரியாக வேலைபார்த்து வருகிறார்.


கடந்த செப்டம்பர் மாதம் இவர் தனது தாயை சுள்ளென்று சுட்டெரிக்கும் வெயிலில் வீட்டுக்கூரையில் விட்டுவந்தார்.
இதுதொடர்பான காட்சிகள் அங்கிருந்த விடியோ கேமராவில் பதிவாகியிருந்தன.
செப்டம்பர் 27ம்தேதி வீட்டின் கூரையில் இருந்து தவறி விழுந்து இறந்துள்ளார் ஜெய்ஸ்ரீபென்.


இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மகன் சந்தீப்பை கைதுசெய்தனர்.
விசாரணையில், தனது தாய்க்கு வைட்டமின் டி பற்றாக்குறை இருந்தது.                                        அதற்காக வெயிலில் நிற்க டாக்டர்கள் பரிந்துரைத்திருந்தனர். எனவே அவரை வெயிலில் விட்டுவந்தேன் என்று கூறியுள்ளார் சந்தீப்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator