கமலஹாசன், தினகரன் திடீர் மோதல்!

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக நடிகர் கமலஹாசனுக்கும், தினகரனுக்கும் மோதல் வெடித்துள்ளது.
நடிகர் கமலஹாசன் வார இதழ் ஒன்றில் தொடர் கட்டுரை எழுதி வருகிறார். அதில், ஆர்.கே.நகர் தேர்தல் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தேர்தலில் ஆளுங்கட்சி ஒரு ஓட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் பட்டுவாடா செய்தது. சுயமாக வளர்ந்த சுயேச்சை ஒரு ஓட்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை பட்டுவாடா செய்துள்ளார். டோக்கனுக்கு விலை போய்விட்டார்கள் ஆர்.கே.நகர் வாக்காளர்கள்., இது ஜனநாயகத்துக்கு வீழ்ச்சி’’ என்று கமல் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.


டிசம்பர் 24ம் தேதியே இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு தினகரனும் எம்.எல்.ஏவாக பதவியேற்ற பின்னர் தொடரில் இவ்வாறு விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் வெளிச்சம் ரஜினிமீது பாய்ந்துள்ள நிலையில் கமல் தன்மீது கவனம் குவிக்க செய்த உத்தி இது என்று விமர்சிக்கப்படுகிறது.
ஆனால், விஸ்வரூபம்2 பட வேளைகளில் இருந்ததால் கமல் லேட்டாக கமெண்ட் கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

இந்நிலையில், கமல் கருத்துக்கு கடும்கண்டனம் தெரிவித்துள்ளார் டிடிவி தினகரன்.
பணம் வாங்கிக் கொண்டு வாக்களித்ததாக ஆர்.கே.நகர் மக்களை கமலஹாசன் கேவலப்படுத்துகிறார். ஜனநாயக ரீதியாக என்னை தேர்ந்தெடுத்த மக்களை கமல்ஹாசன் இதுபோல தரம் தாழ்ந்து குற்றம் சாட்டக் கூடாது என்று தினகரன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here