எம்பி பதவியை விற்பனை செய்த கட்சித்தலைவர்?!

டெல்லி: தேர்தலில் வாக்களிக்க மக்கள் பணம் வாங்குவதை பேசிவருகிறோம்.  அரசியல் கட்சி தலைவர் ஒருவர் எம்பி பதவிக்காக விலைபேசியுள்ள அதிர்ச்சி சம்பவம் தெரியவந்துள்ளது.

பாஜகவை சேர்ந்த எம்பி பர்வேஷ் வர்மா இக்குற்றச்சாட்டை ஆம் ஆத்மி கட்சி மீது வைத்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கேஜரிவால் ரூ.100கோடிக்கு ராஜ்யசபா வேட்பாளரை விலைபேசினார் என்று அவர் குறிப்பிட்டார்.

ஆம் ஆத்மி கட்சி சார்பில் நாடாளுமன்ற மேலவைக்கு 3 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது. அக்கட்சி சார்பில் சஞ்சய்சிங் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார்.
அவ்ருடன் தொழிலதிபர் சுஷில்குப்தா, ஆடிட்டர் நாராயண் தாஸ் குப்தா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


அவர்களிடம் தலா ரூ.50கோடி லஞ்சம் பெற்றுக்கொண்டு கேஜரிவால் எம்.பி. சீட் கொடுத்துள்ளார்.
கேஜரிவால் எம்பி பதவிக்காக தன்னுடைய மனைவியை பரிந்துரைத்திருக்கலாம். அல்லது கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான குமார் விஸ்வாஸ் உள்ளிட்ட தகுதியான சிலர் உள்ளனர்.
ஆனால், காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்து ஆம் ஆத்மியில் சேர்ந்த 40நாட்களுக்குள்ளேயே சுஷில்குப்தாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.


எம்பியாகவுள்ள இருவரும் கேஜரிவாலை தனியாக சந்தித்து பேசியுள்ளனர். ரூ.30கோடியில் இருந்து பேரம் ஆரம்பித்துள்ளது ரூ.50கோடியில் முடிந்துள்ளது.
இதனை கேஜரிவால் மறுத்தால் அவருக்கு உண்மைகண்டறியும் சோதனை நடத்தப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளார் பர்வேஷ் வர்மா.  

தனது புகழுக்கு களங்கம் விளைவித்ததாக பர்வேஷ் வர்மாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் தொழிலதிபர் சுஷில்குப்தா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here