ரூ.800 போதும்! ஆதார் விபரங்களை அள்ளிவிடலாம்!!

ஜலந்தர்: ஒவ்வொரு இந்தியருக்கும்  ஒரு எண் என்பதாக  12இலக்க ஆதார் எண் அளிக்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசு ஆதார் திட்டத்தை அனைத்து அரசு சேவைகளுக்கும் கட்டாயமாக்கி வருகிறது. 

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்துவருகிறது. இந்நிலையில் ரூ.800க்கு ஆதார் விபரங்களை தெரிந்துகொள்ளலாம் என்று பத்திரிகை ஒன்று செய்திவெளியிட்டுள்ளது.

தி டிரிபியூன் நாளிதழின் ஜலந்தர் செய்தியாளர் ரேச்சனா இதுதொடர்பான அதிர்ச்சி தகவலை தனது அனுபவப்பகிர்வாக வெளியிட்டுள்ளார்.

ஆதார் விபரங்களை பல்வேறு தொழில் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை அதிகரிப்பதற்காக பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

இதற்காக ரூ.500 கொடுத்தால் ஆதார் தகவல் தொகுப்பை பார்வையிடுவதற்கான பாஸ்வேர்டு தரப்படுகிறது.

இதற்கான பணத்தை பே டிஎம் மூலம் செலுத்தி ஆதார் விபரங்களை பார்வையிட்டேன். ரு.300 அதிகமாக செலுத்தினால், அனைவரது ஆதார் அட்டை விபரங்களையும் ப்ரிண்ட் அவுட் செய்துகொள்ளும் சாப்ட்வேர் கிடைக்கிறது. இவ்வாறு ரேச்சனா கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இதனை ஆதார் அமைப்பு மறுத்துள்ளது. பலகட்ட சோதனைகளுக்கு பின்னரே ஆதார் விபரங்களை பெறலாம் என தெரிவித்துள்ளது.  ஆதார் அட்டை எடுத்தவர்களின் பயோமெட்ரிக் விபரங்களான கண்பாவை, கைரேகை ஆகியவற்றை யாரும் நெருங்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

மேலும், ஆதார் விபரங்களை தெரிந்துகொள்ள முயற்சித்ததாக வெளியான செய்தி குறித்து புகார் அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here