முத்தலாக் சட்டம்! பாஜக சஸ்பென்ஸ்!!

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையை ஏற்று முத்தலாக் விவாகரத்து முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.
இச்சட்டத்துக்கு முஸ்லிம் சட்டவாரியம், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இருந்தபோதும் மக்களவையில் 28ம்தேதி நிறைவேற்றப்பட்டு மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டது.

முஸ்லிம் பெண்அள் திருமண உரிமை பாதுகாப்புச்சட்டம் இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
மசோதாவை மாநிலங்களவையின் தேர்வு குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனை எதிர்க்கட்சிகள் ஆமோதித்தன. அதற்கு ஆளும் கூட்டணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவையில் அமளி ஏற்பட்டது.


மசோதாவை வாக்கெடுப்புக்கு விடலாம் என்று குலாம்நபி ஆசாத் கூறினார். அந்த யோசனை நிராகரிக்கப்பட்டது. அவை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து கவலை தெரிவித்தார் நிதியமைச்சர் அருண்ஜெட்லி. காங்கிரசின் நடவடிக்கையால் முஸ்லிம் பெண்களுக்குத்தான் பாதிப்பு என்றார்.
இச்சட்டத்தை எப்படி நிறைவேற்றுகிறோம் பாருங்கள் என்று சஸ்பென்ஸ் வைத்துச்சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here