தட்கால் சேவையில் பலகோடி மோசடி!! சிபிஐ போலீசிடம் ஒருவர் சிக்கினார்!!

மும்பை: ரயிலில் தட்கால் வசதியை பயன்படுத்தி பலகோடி ரூபாய் சுருட்டிய அதிர்ச்சி தகவல் சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது.
ரயிலில் முன்பதிவு செய்வதில் முறைகேடு நடப்பது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்திவந்தது.
ரயில்வேயின் இணையப்பக்கத்தை 24மணி நேரமும் தொடர்ந்து சிபிஐ போலீசார் கண்காணித்துவந்தனர்.


அப்போது ரயில்வேக்கு சொந்தமான வெப்சைட்டுகள் வழியாக முன்பதிவு செய்யும் முன்னரே இருக்கைகள் பதிவாகி வந்த விஷயம் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து உஷாரான சிபிஐ போலீசார் எந்தெந்த சாப்ட்வேர்களைக்கொண்டு இவ்வாறு முன்பதிவு செய்யமுடியும் என்று விசாரித்தனர்.


அப்போது ரயில்வேயில் பணியாற்றிய முன்னாள் தொழில்நுட்ப வல்லுநர் அஜய்கர்க் இதுதொடர்பாக ஒரு சாப்ட்வேர் தயாரித்துள்ளது தெரியவந்தது.
இந்த சாப்ட்வேர் வழியாக ரயில் டிக்கெட் எடுப்பதற்கு ஐஆர்சிடிசி இணையப்பக்கத்தை அணுகினால், அரசு தளத்தை விடவும் வேகமாக டிக்கெட் எடுக்க முடியும். அவ்வகையில் தனது சாப்ட்வேரை வடிவமைத்திருந்தார் அஜய்கர்க்.

மேலும், இந்த சாப்ட்வேரை பயன்படுத்தும்போது கேப்ச்சா போன்ற எந்த தடங்கலும் ஏற்படவில்லை. இதனால் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் போலிசாப்ட்வேர் உதவியால் டிக்கெட் முன்பதிவு நடந்து சில நிமிடங்களில் முடிவுக்கு வந்துவிடுகிறது.

இவ்வாறு நாடு முழுவதும் இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி கோடிகோடியாக பணம் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
சிபிஐ போலீசார் அஜய்கார்க்கை கைதுசெய்தனர். அவரிடம் விசாரணை தொடர்ந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here