மக்களின் இயலாமையை பயன்படுத்தி….வங்கி சம்பாதித்தது ரூ.1,772கோடி

மும்பை: வாடிக்கையாளர்களின் இயலாத நிலையை பயன்படுத்தி இந்தியாவின் மெகாவங்கி லாபம் ஈட்டியுள்ளது.
எஸ்பிஐ வங்கியில் 40.50கோடி சேமிப்பு கணக்குகள் உள்ளன. இந்த வங்கி கடந்த ஆண்டு ஏப்ரலில் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.


அதன்படி, வங்கியின் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச தொகை பராமரிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியது.
பெருநகரங்களில் கணக்கு வைத்திருப்போர் ரூ.3ஆயிரம், கிராமங்களில் ரூ.ஆயிரம் குறைந்தபட்ச கையிருப்பு தொகையாக வைத்திருக்க உத்தரவிட்டது.
அவ்வாறு கணக்கில் குறைவான பணம் வைத்திருப்போருக்கு மாதந்தோறும் நகர்புற வாடிக்கையாளர்களுக்கு 6 ரூபாயும், கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு, 2 ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டது.


அதன்படி இந்த காலக்கட்டத்தில் ரூ. 1,772 கோடி ரூபாயை அபராத தொகையாக எஸ்பிஐ வங்கி வசூலித்துள்ளதாக நிதியமைச்சக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தொகை, அந்த வங்கி கடந்த நிதியாண்டில் சம்பாதித்த நிகர லாபத்தை விடவும் அதிகமாகும்.


அபராத திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் இந்த அபராதத் தொகையை குறைத்துக் கொண்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here