2021ல் ரஜினி தமிழக முதல்வர்! நடிகர் அம்பரிஷ் கணிப்பு!!

பெங்களூர்: தனிக்கட்சி தொடங்கவுள்ள நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தின் முதலமைச்சராவார் என்று தெரிவித்தார் கன்னட நடிகரும், காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான அம்பரிஷ்.

ரஜினிகாந்தின் நெருங்கிய பெங்களூர் நண்பர்களில் ஒருவர் அம்பரிஷ்.  ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அவர் கூறுகையில்,

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ரஜினிகாந்த் வெற்றி பெற்று, முதல்வராக பதவி ஏற்பார் என அவரது நண்பரும் கன்னட நடிகருமான அம்பரீஷ் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரான அம்பரீஷ், இது தொடர்பாக பெங்களூருவில் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:

நண்பர் ரஜினி காந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

 

நீண்ட காலமாக காத்திருந்த ரசிகர்களுக்கு புத்தாண்டில் நல்ல செய்தி சொல்லி இருக்கிறார்.

தமிழக அரசியலில் இப்போது வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அதை ரஜினியால் நிரப்ப முடியும்.

ரஜினியைப் பொறுத்தவரை மிகவும் எளிமையானவர். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். அரசியலுக்கு வருவது குறித்து என்னிடமும் நடிகர் சிரஞ்சீவியிடமும் கருத்து கேட்டார்.

இப்போதைய சூழலில் தமிழகத்தில் மக்கள் செல்வாக்கு படைத்த பெரிய தலைவர்கள் இல்லை. எனவே 2021 தேர்தலில் நிச்சயம் ரஜினி அமோக வெற்றி பெற்று தமிழக முதல்வராக பதவி ஏற்பார்.

இவ்வாறு அம்பரிஷ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here