ரூ.5க்கு சாப்பாடு; ரூ.10க்கு மருந்து! சமூக சேவகரின் அசத்தல் திட்டம்!!

டெல்லி: டெல்லியை அடுத்துள்ள நொய்டா நகரில் ஏழை மக்களுக்காக தினமும் ரூ.5ல் சாப்பாடு, ரூ.10க்கு மருந்து, துணிகள், காலணி வழங்கி வருகிறார் ஒருவர்.

 

நொய்டாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அனூப் கன்னா. இவர் 2 இடங்களில் உணவகம் நடத்திவருகிறார்.
அதில் ஏழை எளிய மக்களுக்கு மிக குறைந்த விலையில் உணவு வழங்குகிறார்.
5 ரூபாய்க்குச் சாப்பாடும், 10 ரூபாய்க்கு மருந்து மற்றும் துணிகள், காலணிகளும் வழங்கிவருகிறார்.

தினமும் சராசரியாக 500பேர் இவரது சேவையால் பயன்பெற்று வருகின்றனர்.
இது குறித்து அனூப் கன்னா கூறுகையில், குழந்தைப் பருவத்திலிருந்து நான் சமூக சேவைகளில் ஈடுபட்டுவருகிறேன். என்னுடைய அப்பா சுதந்திரப் போராட்டத்தில் காந்தி, ஜின்னாவுடன் சேர்ந்து பங்கேற்றவர்.

பொருளாதார ரீதியாகப் பலவீனமான மக்களை நான் பிச்சைக்காரர்களாக நடத்த விரும்பவில்லை. உணவு, துணி, மருந்து ஆகியவை ஒருவரது அத்தியாவசியத் தேவைகள். சமுதாயத்தில் பொருளாதார ரீதியாகப் பலவீனமானவர்களுக்கு மலிவு விலையில் இந்த மூன்று விஷயங்களையும் அளிப்பதே என்னுடைய நோக்கம் என்றார்.

அதிகம் பேர் இந்த முயற்சியில் என்னோடு இணைந்துள்ளனர். இதுபோன்ற சேவையில் ஈடுபடுவது கடினமல்ல.அதைச் செயல்படுத்துவதற்குத் தேவையான ஊக்கம் இருந்தால் போதும். இவ்வாறு அனூப்கன்னா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here