ஹஜ் பயணத்துக்கு கட்டுப்பாடு! மத்திய அரசை எதிர்த்து வழக்கு!!

டெல்லி: மாற்றுத்திறனாளிகள் ஹஜ் பயணம் செல்ல மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்கின்றனர்.
மத்திய அரசு அவர்களது பயணத்துக்கு மானிய உதவி வழங்கிவருகிறது.
இந்நிலையில், அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள ஹஜ் பயணம் தொடர்பான நடவடிக்கை குறிப்பில்,
மனநலம் பாதிக்கப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் ஹஜ் பயணம் செல்ல அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

எதிர்த்து கவுரவ் பன்சால் என்ற வழக்கறிஞர் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 14, 21 மற்றும் 25 வழங்கியுள்ள மத சமத்துவம் தொடர்பான உரிமைகளுக்கு எதிராக மத்திய அரசின் உத்தரவு உள்ளது. அதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று அவர் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசின் சிறுபான்மையினர் நலத்துறை, சமூகநீதித்துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை ஏப்ரல் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதற்கிடையே, இந்த ஆண்டுமுதல் ஆண் துணையின்றி பெண்கள் ஹஜ் செல்ல இந்திய ஹஜ் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, கேரளாவில் இருந்து 1,124 பெண்கள் குழு, ஆண் துணையின்றி கிளம்ப தயாராக உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here