அமீரக மக்கள் ஸ்கைப் தடையால் பாதிப்பு!

அமீரகம்: அமீரகத்தில் ஸ்கைப் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்புக்குள்ளான மக்கள் தகவல் தொடர்புக்கு புதிய ஆப் மற்றும் சாப்ட்வேர்களை மக்கள் நாட தொடங்கியுள்ளனர்.


அமீரக மக்களிடம் ஸ்கைப் ஆப் பிரபலமான ஒன்று. இதன் உதவியுடன் செல்போன், கம்ப்யூட்டர், டேப்லட் ஆகியவற்றில் வாய்ஸ் மற்றும் விடியோ அழைப்புகள் செய்யப்பட்டு வந்தன.
ஸ்கைப் நிறுவனம் அரசிடம் முறையாக உரிமம் பெறாமல் இயங்கிவந்தது.

அரசின் வழிகாட்டும் நெறிமுறைகளையும் ஸ்கைப் பின்பற்றவில்லை. இதனைத்தொடர்ந்து ஸ்கைப் ஆப் தடைசெய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்கைப் நிறுவனமும் தனது வெப்சைட்டில் அமீரகத்தில் தங்கள் ஆப் வேலைசெய்யாது என தெரிவித்துள்ளது.


அமீரகத்தில் உரிமம் பெற்று இயங்கும் இரு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்ளன. இடிசாலட், டியூ ஆகிய இரண்டுமே ஆப் சேவை நடத்திவருகின்றன.
பொடிம், சி’மீ ஆகிய இரு ஆப்களும் தங்கள் சேவைக்கு கட்டணம் விதிக்கின்றன.
இதனைத்தொடர்ந்து விசி, வூவூ, ஜிட்சி போன்ற ஆப் மீது மக்கள் கவனம் திரும்பிவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here