தமிழகத்தில் அரசியல் புரட்சி தொடங்கவேண்டும்! நடிகர் ரஜினிகாந்த் விருப்பம்!!

சென்னை: தமிழகத்தில் இருந்து அரசியல் புரட்சி தொடங்கவேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

சென்னையில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: பத்தாவது வகுப்பில் தோற்றபின் சம்யுக்த கர்நாடகா என்ற நாளிதழில் 2மாதம் ப்ரூப் ரீடராக பணிசெய்துள்ளேன்.

1976ல் பொம்மை பத்திரிகைக்கு முதன்முதலாக பேட்டி கொடுத்தேன். 1996க்குப்பின் தனிப்பட்ட பேட்டி அளித்ததில்லை.

அரசியல் என்று வந்தபின்னர் மீடியாவை எப்படி கையாளவேண்டும் என்று தெரியவில்லை.  பத்திரிகையாளர்களிடம் ஏதாவது கூறினால் அது விவாதப்பொருளாகி விடுகிறது.

அனைத்து போராட்டங்களுமே தமிழ்நாட்டில்தான் தொடங்குகிறது. பல விஷயங்களுக்கு தமிழகம்தான் முதன்மையாக திகழ்கிறது.

பல வரலாற்று நிகழ்வுகள் தமிழகத்தில் தொடங்கியுள்ளன. ஒரு அரசியல் புரட்சி இங்கிருந்து தொடங்க வேண்டும் என்பது என் ஆசை. அதை இப்போது தொடங்கினால் பின்வரும் சந்ததியினர் சந்தோஷப்படுவார்கள்.

கட்சிக் கொடி தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.  இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

முன்னதாக, ஆன்மிக அரசியல் குறித்து அவர் கூறுகையில், உண்மையான, நேர்மையான, நாணயமான அரசியலே.,  மதசார்பற்ற அறவழி  அரசியலே ஆன்மிக அரசியல்.                                  ஆன்மிகம் ஆத்மாவுடன் தொடர்புடையது என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here