மசூதியில் வாலிபர் அட்டூழியம்! மன்னித்த மசூதிநிர்வாகம் அபராதத்தையும் செலுத்தியது!!

அர்கன்சாஸ்: மசூதியில் அட்டூழியம் செய்த நபரை மன்னித்து அவரது அபராத தொகையை மசூதி நிர்வாகமே கட்டியுள்ளது.
அமெரிக்காவின் அர்கன்சாஸ் மாகாணத்தில் போர்ட் ஸ்மித் நகரில் அல் சலாம் என்ற மசூதி உள்ளது.
2016ல் அந்நகரில் நடைபெற்ற கலவரத்தில் மசூதிக்குள் புகுந்த ஆப்ரஹாம் டேவிஸ் என்றநபர் உடனே வெளியேறுங்கள் என்று கோஷமிட்டார்.


அவர் எடுத்துவந்திருந்த ஸ்ப்ரே பெயிண்டால் கோஹோம் என்று மசூதி சுவர் முழுவதும் எழுதினார்.
அங்கிருந்த கேமராவில் அவர் பதிவாகியிருந்தார். போலீசார் அவரை கைதுசெய்து வழக்குப்பதிவு செய்தனர்.
நீதிமன்றம் அவருக்கு 1,700டாலர் அபராதம் விதித்தது. அபராத தொகையை கட்டாவிடில் 6வருடம் சிறைத்தண்டனை நீட்டிக்கவும் உத்தரவிட்டது.


ஆபிரஹாம் டேவிஸ் பணப்பிரச்சனையில் உள்ளது மசூதி நிர்வாகத்துக்கு தெரியவந்தது.
உடனடியாக மசூதியின் நிர்வாக குழு கூடி ஆபிரஹாமின் அபராதத்தொகையை செலுத்த முடிவானது.


அல் சலாம் என்றால் அமைதி என்று பொருள். அதற்கேற்ப அனைத்து மக்களுடனும் அமைதியாக வாழவே எங்களுக்கு விருப்பம் என்று மசூதி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here